தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?



குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் ஆரோக்கியமாக வளர அவர்களுக்கு உடல் நலத்தை மற்றும் வளர்ச்சியை தரும் உணவுகளை அளித்து வளர்க்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வது என்பது முழுக்க முழுக்க தாயின் கடமையாகும். ஏனெனில் குழந்தை பிறந்து முதல் ஆறு மாதங்கள் வரை நீர் கூட பருகாமல் தாய்ப்பால் மட்டுமே பருக வேண்டும்.
குழந்தைக்கு தாய்ப்பால் அளித்து, அதனை நல்ல உடல் நலம் பொருந்திய மனிதராக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு!
தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா? 
தாய்ப்பாலின் முக்கியத்துவம்!
தாய்ப்பால் குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவும் என்பதை தவிர்த்து, தாய்ப்பால் வேறு பல நன்மைகளை குழந்தைக்கும், அன்னைக்கும் அளிக்கிறது. பெண்ணின் உடலில் தாய்ப்பால் சுரப்பு நிகழ்ந்தால் பெண்ணிற்கு புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப் படுகிறது. தாய்ப்பால் சுரப்பதால் அன்னையின் உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் குழந்தையின் மூளை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் சிறப்பாக செயல்பட தாய்ப்பால் பேருதவி செய்கிறது.

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
தாய்ப்பாலூட்டுவது பலவீனப்படுத்துமா?
குழந்தைக்கு பால் கொடுப்பது தாய்மார்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற பெய்யான கதை நம்மிடையே நிலவுகிறது. ஆனாலும் சில சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கும் பொழுதே அல்லது பால் கொடுத்து முடித்த பின் பலவீனமாக, மிகவும் சோர்வாக உணர்வதாக தகவல்கள் வெளியாகின்றன. இது உண்மையா? அப்படி இந்த செய்தி உண்மை என்றால் அதற்கு என்ன காரணம் என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்!

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
பலவீனம் ஏற்படுவது உண்மையா?
குழந்தைக்கு பால் ஊட்டும் பொழுது, தாய்மார்கள் பலவீனம் அடைகிறார்கள்; சோர்வாக உணர்கிறார்கள் என்பது சில பெண்களின் விஷயத்தில் உண்மையே! ஆனால் எல்லா பெண்களுக்கும் இது போன்ற குறைபாடுகள் நடப்பது இல்லை. பெண்களின் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த சக்தியில் 25-30 சதவீதம் தாய்ப்பால் சுரப்பில் பயன்படுத்தப்படுகிறது.

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
வாழ்க்கை முறை காரணமா?
இவ்வாறு தன் சக்தியை பெண்கள் இழப்பதால், அவர்களின் உடலில் மேற்கூறிய குறைபாடுகள் ஏற்படுகின்றன. இந்த சக்தி இழப்பு ஏற்பட பெண்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் தான் முக்கிய காரணங்களாகும். அப்படிப்பட்ட முக்கியமான அன்றாட பழக்க வழக்க காரணங்கள் என்னென்ன என்று இப்பொழுது அடுத்தடுத்த பத்திகளாக படித்து அறியலாம்.!

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
உறக்க முறை!
ஓரு ஆணோ பெண்ணோ, ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரங்களாவது உறங்க வேண்டும். ஆனால் குழந்தையை பெற்று எடுத்த முதல் ஆறு மாத கால கட்டத்திற்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், பெண்களின் உறக்கம் தடைபடுகிறது. சரியான உறக்கம் இல்லாததால், பெண்கள் பால் ஊட்டும் பொழுதும், பிற செயல்பாடுகள் புரியும் பொழுதும் அதிகம் சோர்வாக உணர்கின்றனர்.

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
உணவு முறை!
பெண்கள் குழந்தையை பெற்று எடுத்த பின், அவர்களின் உடல் பலவீனப்பட்டு இருக்கும்; மேலும் பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் கடமையும் வேறு இருக்கும். இந்த நிலையில் பெண்கள் மிகவும் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமல்,ஆற்றல் அளிக்கும் சாப்பாடை சாப்பிடாமல், தாய்ப்பால் சுரக்க உதவும் உணவுகளை உண்ணாது இருந்தால், அவர்களின் உடல் மிக அதிகமாக பலவீனப்பட்டு, ஒரு சிறு செயல் கூட செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
தண்ணீர் பருகுதல்!
பெண்கள் உடலின் சக்தி பல வித மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, தாய்ப்பாலாக மாற்றப்பட்டு குழந்தைக்கு அளிக்கப்படுகிறது; இந்நிலையில் தாய்மார்களின் உடலில் நீர்ச்சத்து குறைய அதிக வாய்ப்பு உள்ளது; ஏனெனில் திரவ நிலையில் தான் பெண்ணின் மாற்றப்பட்ட உடல் சக்தி, பாலாக குழந்தைக்கு தரப்படுகிறது. எனவே, இத்தகைய சூழலில் தனது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தாய்மாரின் கடமை!

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
உடலில் ஏற்பட்டுள்ள நோய்கள்!
ஏற்கனவே பெண்களின் உடலில் இரத்த சோகை, தைராயிடு போன்ற பிரச்சனைகள் இருந்தால், பிரசவம் மற்றும் தாய்ப்பால் அளிப்பு காரணமாக ஏற்படும் உடல் சோர்வு மற்றும் வலியுடன், இந்த நோய்களின் தாக்கமும் சேர்ந்து கொள்ளும். அனைத்தும் ஒன்றாக ஒரே நேரத்தில் தாக்கும் நிலை நேர்ந்தால், பலவீனப்பட்டு நிர்ப்பதை தவிர வேறு வழி இருக்காது. ஆகையால் பெண்களின் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களும் அவர்தம் சோர்விற்கு முக்கிய காரணங்களாக உள்ளன!

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
மார்பக பிரச்சனைகள்!
தாய்மார்களின் மார்பகத்தில் ஏதேனும் குறைபாடுகள், வலிகள், மார்பகம் தொடர்பான நோய்கள் போன்றவை ஏற்பட்டு இருந்தால், அச்சமயம் பெண்கள் அதிகம் சோர்வாக உணர்வர். மார்பகத்தில் இருக்கும் வலியை தாய்ப்பால் அளிக்கும் பொழுது குழந்தையின் வாய் தொடர்ந்து பட்டுக் கொண்டே இருப்பதால் ஏற்படும் உணர்வு அதிகரித்து, பெண்களை மேலும் பலவீனப்படுத்தி விட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தாய்ப்பால் அளிப்பதால் தாய்மார்களின் உடல் பலவீனப்பட்டு விடுமா?
மருத்துவர் சந்திப்பு!
பெண்கள் தங்களால் முடியாத நிலையை எட்டும் பொழுது, உடல் அதிகப்படியான சோர்வினை அடையும் பொழுது, உடனடியாக மருத்துவரை சந்தித்து, என்ன காரணம் என்று அறிந்து உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள முயலுங்கள்! ஏனெனில் சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் என்பது போல, நீங்கள் நலமுடன் இருந்தால் தான், நீங்கள் பெற்று எடுத்த உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக, நலத்துடன் வளர்க்க முடியும்!

Comments