யோனியில் நீர் பீய்ச்சியடித்துக் கழுவுதல் - செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்



யோனியில் நீர் பீய்ச்சியடித்துக் கழுவுதல் என்றால் என்ன? (What is vaginal douching?)
யோனியின் உட்புறங்களை நீர் அல்லது பிற திரவங்களைக் கலந்த நீரை ஊற்றிக் கழுவதே யோனியில் நீர் பீய்ச்சியடித்தல் எனப்படுகிறது.
குளிக்கும்போது நாம் உடலை நீரால் கழுவதற்கும் இதற்கும் வித்தியாசமுள்ளது. பெண்ணுறுப்பின் வெளிப்புறத்தை நீரூற்றிக் கழுவுவதால் கெடுதல் எதுவும் இல்லை. ஆனால், யோனிக்கு உட்புறத்தில் நீரை ஊற்றிக் கழுவுவதால் உடல்நலப் பிரச்சனைகள் சில ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
பெண்ணுறுப்பின் திறப்பின் வழியாக, நீரை வேகமாகத் தெளிக்கும் குழாய் அல்லது ஷவர் போன்றவற்றைப் பயன்படுத்தி, நீரை வேகமாகத் தெளிப்பதன் மூலம் இப்படி செய்யப்படுகிறது. பிறகு பெண்ணுறுப்பின் திறப்பின் வழியாக நீர் மீண்டும் வெளியேறும். சில நிறுவனங்கள் இதற்காக வெஜைனல் இர்ரிகேட்டர் எனப்படும் சாதனங்களை விற்பனை செய்கின்றன, இவற்றையும் சிலர் பயன்படுத்துவதுண்டு. வினிகர், அயோடின், சமையல் சோடா போன்றவற்றைக் கொண்டுள்ள சில தயாரிப்புகளும் இதற்காக விற்பனைக்குக் கிடைக்கின்றன.
பெண்கள் எதற்காக இப்படிச் செய்கிறார்கள்? (Why do women douche?)
அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவை ஆய்வு செய்து பார்த்ததில், இனப்பெருக்க வயதுப் பிரிவில் (15-44) உள்ள பெண்களில், நான்கில் ஒருவர் இப்படிச் செய்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.
பெண்கள் இதனைச் செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம்:
  • சுத்தம்: பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருத்தல்
  • பெண்ணுறுப்பில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்குதல்
  • மாதவிடாய் நாட்களுக்குப் பிறகு, எஞ்சிய இரத்தத்தைக் கழுவி அகற்றுதல்
  • உடலுறவின்போது படிந்த விந்தைக் கழுவி அகற்றுதல்
  • பாதுகாப்பற்ற பாலியல் உடலுறவு கொண்ட பிறகு தொற்று நோய்கள் வராமல் தடுத்தல்
இதனால் ஏற்படக்கூடிய கெடுதல்கள் (What are the harms of douching?)
பெண்ணுறுப்பில் லாக்டோபேசில்லை எனப்படும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். இவை ஹைட்ரஜன் பெராக்சைடு (H202) உற்பத்தி செய்யும், இந்தத் திரவமானது கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மை கொண்டது. அடிக்கடி பெண்ணுறுப்புக்குள் நீர் பீய்ச்சியடித்துக் கழுவினால், அங்கிருக்கும் இந்த நன்மை தரும் பாக்டீரியாக்கள் குறையலாம், இதனால் யோனியின் அமிலத்தன்மை குறையக்கூடும். இதனால், நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, தீங்கு தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைவிடக் குறையும். இதனால் பெண்ணுறுப்பு சம்பந்தப்பட்ட நோய்த்தொற்றுகள் உண்டாக ஏதுவாகும். யோனியில் pH சமநிலை இப்படி மாறுவது, யீஸ்ட் அல்லது பிற பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு சாதகமாகலாம்.
ஏற்கனவே யோனி நோய்த்தொற்று உள்ள பெண்கள், இப்படி மேல்நோக்கி நீர் பீய்ச்சியடித்துக் கழுவுவதால் கருப்பை, ஃபெல்லோப்பியன் குழாய்கள் மற்றும் சினைப்பைகளில் நீர் போவதால் கீழ் இடுப்புப் பகுதி அழற்சி நோய் (பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ் (PID)) உண்டாகலாம்.
இதனால் ஏற்படக்கூடிய பிற உடல்நலப் பிரச்சனைகளில் சில:
  • யோனி பாக்டீரியத் தொற்றுஒருபோதும் இப்படி நீர் பீய்ச்சியடித்துக் கழுவாமல் இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு ஒரு முறை இப்படிக் கழுவுபவர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமுள்ளது.
  • இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சி ஏற்படலாம், இதனை கீழ் இடுப்புப் பகுதி அழற்சி நோய் (பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ் (PID)) என்கிறோம். பெண்ணுறுப்பில் நீரூற்றிக் கழுவது, இந்நோய் ஏற்படும் அபாயத்தை சுமார் 30-50% அதிகரிப்பதாகத் தெரிகிறது. இன்னும் அடிக்கடி இப்படிச் செய்யும் பெண்களுக்கு, குறைவாகச் செய்பவர்களை விட PID ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • இப்படிச் செய்பவர்களுக்கு, பால்வினை நோய்த்தொற்றுகள் உண்டாகும் வாய்ப்பும் அதிகம் எனத் தெரியவருகிறது.
  • கருக்குழாய்க் கருவளர்ச்சி: கருப்பைக்கு வெளியே கரு பதிந்து வளர்தல். யோனிக்குள் இப்படி நீர் பீய்ச்சியடித்துக் கழுவுவது, கருக்குழாய்க் கருவளர்ச்சி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் காண்பித்துள்ளன.
  • கீழ் இடுப்புப் பகுதி அழற்சி நோய் (பெல்விக் இன்ஃப்ளமேட்டரி டிசீஸ் (PID)) உண்டாகும் ஆபத்து அதிகரிப்பதால், குழந்தை பெறும் திறன் குறைதல் மற்றும் கிருமிகள் இருப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
  • யோனிக்குள் நீர் பீய்ச்சியடித்துக் கழுவுவதால், கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது .

இப்படிச் செய்வதால் யோனி துர்நாற்றம் அல்லது அரிப்பு போகுமா? (Can I get rid of vaginal odour or itching by douching?)
யோனியில் இருக்கும் துர்நாற்றம், குறிப்பாக வெள்ளைப்படுதல் காரணமாக ஏற்படுவதாக இருந்தால், அத்துடன் வலி, அரிப்பு அல்லது எரிச்சல் போன்ற பிற அறிகுறிகளும் இருக்கும். யோனி நோய்த்தொற்று அல்லது பிற பால்வினை நோய்களால் இவை ஏற்படலாம். நீர் பீய்ச்சியடித்துக் கழுவுவது தற்காலிக நிவாரணத்தை அளிக்கலாம், ஆனால் அது பிரச்சனையைத் தீர்க்காது.
துர்நாற்றம், வெள்ளைப்படுதல், கேட்டியாக மஞ்சள்-பச்சை நிறத்தில் வெள்ளைப்படுதல், பெண்ணுறுப்பில் அரிப்பு, எரிச்சல், சிவத்தல் அல்லது வீக்கம், சிறுநீர் கழிக்கும்போது அசௌகரியம், உடலுறவின்போது வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
மகளிர் நலவியல் மருத்துவரிடம் செல்லும் முன்பு, நீரைப் பீய்ச்சியடித்துக் கழுவ வேண்டாம், அப்படிச் செய்தால் பிரச்சனையைக் கண்டறிவது கடினமாகலாம்.
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டேன் அல்லது உடலுறவின்போது ஆணுறை கிழிந்துவிட்டது என்ற சூழ்நிலையில், இப்படிக் கழுவினால் கர்ப்பமாகாமல் தடுக்க முடியுமா?
நீரைப் பீய்ச்சியடிப்பதால் கற்பத்தைத் தடுக்க முடியாது. பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டால் அல்லது உடலுறவின்போது ஆணுறை கிழிந்துபோனால், உடனடியான கருத்தடைத் தீர்வுக்கு உங்கள் மருத்துவரிடம் செல்லவும்.
இப்படி நீரைப் பீய்ச்சியடித்துக் கழுவுவது பால்வினை நோய்த்தொற்றுகள் (STD) ஏற்படாமல் பாதுகாக்குமா? (Will douching give protection against STDs?)
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் முன்பு அல்லது அதற்குப் பிறகு இப்படி நீரைப் பீய்ச்சியடித்து யோனியைக் கழுவுவதால், பால்வினை நோய்த்தொற்றுகள் தடுக்கப்படாது. இப்படிச் செய்யும்போது யோனியில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன, இதனால் பாதுகாப்பற்ற உடலுறவினால் ஏற்படக்கூடிய STD எனப்படும் பால்வினை நோய்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கவே செய்யும்.
அப்படியானால், பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? (What is the best way to maintain my vaginal hygiene?)
பெண்ணுறுப்பில் உள்ள செல்களில் இருந்து, இயற்கையாகவே சுத்தப்படுத்தும் தன்மை கொண்ட சளித் திரவம் சுரக்கிறது. இதுவே இரத்தம், வெள்ளைப்படுதல் அல்லது விந்து போன்றவற்றை அகற்றி பெண்ணுறுப்பை சுத்தம் செய்யப் போதுமானது. இப்படியாக யோனியே தன்னை சுத்தம் செய்துகொள்ளும், அதுவே நல்லது. பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்திருந்தாலும், சிறிதளவு துர்நாற்றம் இருக்கவே செய்யும். அது உங்களுக்குப் பிரச்சனை என்றால் மகளிர் நலவியல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.
யோனியை சுத்தமாக வைத்திருக்க சில அறிவுரைகள்:
  • குளிக்கும்போது யோனியின் வெளிப்புறத்தைக் கழுவி சுத்தம் செய்யலாம். மென்மையான சோப்பைக் கொண்டு யோனியின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வது பரவாயில்லை, ஆனால் வலிமை மிக்க வேதிப்பொருள்கள் அல்லது நறுமணப் பொருள்களைக் கொண்ட சோப்பைப் பயன்படுத்துவது யோனியில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக எளிதில் பாதிக்கும் சருமம் கொண்டவர்களுக்கு எரிச்சல் உண்டாகும்.
  • நறுமணத்துடன் கூடிய டாம்பொன், பவுடர், பேட், ஸ்ப்ரே போன்ற அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை யோனியில் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

Comments