பெண்கள் கர்ப்ப பரிசோதனை செய்துகொள்வதற்கு பற்பசையைப் பயன்படுத்துவதேன்?




பற்பசையைக் கொண்டு வீட்டிலேயே கருத்தரிப்புப் பரிசோதனை செய்யலாம் என்று நீங்கள் என்றேனும் கற்பனை செய்ததுண்டா? விஞ்ஞான ரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், உலகின் பல பாகங்களிலுமுள்ள பெண்கள் இப்பரிசோதனையை வீட்டில் முயன்று பார்க்கின்றனர். என்ன! நீங்களும் முயன்று பார்க்கிறீர்களா?
உலகெங்கிலுமுள்ள பெண்கள் தாங்கள் கருத்தரித்திருப்போமோ என்ற சந்தேகம் எழும்போது , 2௦16 ஆம் ஆண்டில் யூ-டியூப்-ல் வெளியான DIY கருத்தரிப்பு பரிசோதனையை செய்து பார்க்க ஆரம்பித்தனர். இச்செய்தி வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவத்தொடங்கியது. 'பற்பசை கருத்தரிப்புச் சோதனை' என்று பலராலும் அறியப்பட்ட இச்சோதனையைப் பின்பற்றி பல பெண்கள் தங்களது குளியலறைக்குச் சென்று தாங்கள் கருத்தரித்திருக்கிறோமா என்று சோதனை மேற்கொள்கின்றனர்.அவர்களுக்குத் தெரியும் இச்சோதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று. இருப்பினும் அவர்கள் இச்சோதனையைச் செய்துபார்க்கவே விரும்பினர்.
இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை இங்கே காண்போம். ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு வெள்ளை நிற பற்பசையை எடுத்துக் கொள்ளவும். அதில் காலையில் வெளியேறும் சிறுநீரில் சில துளிகளைச் சேர்க்கவும். பின்னர் நன்கு கலக்கவும். மூன்று நிமிடங்கள் பொறுத்திருந்து பார்க்கவும். அந்தப் பெண் கர்ப்பமுற்றிருந்தால் பற்பசை நுரைத்துக் கொண்டு நீலநிறமாக மாறிவிடும். ஒரு மாற்றமும் இல்லையெனில் பெண் கர்ப்பமுறவில்லை எனக் கொள்ளலாம்.
https://www.youtube.com/watch?v=ulfac8-JLY0

https://youtu.be/ulfac8-JLY0
இந்த ஒரு விஷயம் திடீரென்று ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது என்று தற்போதைய போக்குப் பகுப்பு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது போன்ற கருத்தரிப்பு பரிசோதனைகளை எளிதில் எங்கும் சென்று செய்துகொள்ள முடியாதபோதும், முக்கியமாக கிராமப் புறங்களில் வாழும் பெண்களும் சில பத்தாண்டுகளுக்கு முன்பாகவே வீட்டிலிருந்தபடியே செய்து பார்த்து உறுதி செய்து கொள்வதாக சில வலைத்தளங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அறிவியல் அறிஞர்களும், மருத்துவ நிபுணர்களும் பெண்கள் இந்த நடைமுறையை இந்த அளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர். மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய, எளிதாக வீட்டில் செய்யக்கூடிய கருத்தரிப்புச் சோதனைகளையே தேர்ந்தெடுக்கச் சொல்கின்றனர். இது 99% துல்லியமாக இருக்கும் என்று உறுதியளிக்கின்றனர். அல்லது உறுதியான இரத்தப் பரிசோதனை செய்ய அறிவுறுத்துகின்றனர்.
சிறுநீரில் உள்ள அமிலம் பற்பசையில் உள்ள கால்சியம் கார்பொனேட்டுடன் வினை புரிந்து கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடுகிறது. இதனால் பற்பசை நுரைத்துக் காணப்படுவதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள். இதற்கும் கருத்தரிப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இருப்பினும், எந்த ஒருவரின் சிறுநீரையும் பற்பசையுடன் கலக்கும் பொழுது நுரை உண்டாகும். ஆனால் கர்ப்பமுற்ற ஒரு பெண்ணின் சிறுநீருடன் பற்பசையைக் கலக்கும்பொழுது, சிறிதளவே நுரை உண்டாகும். ஏனெனில், கர்ப்பமுற்ற பெண்ணின் சிறுநீர் குறைந்த அளவு அமிலத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று வேறு சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வேறு சில பெண்கள் சர்க்கரை மற்றும் ப்ளீச் உடன் இந்த சோதனையைச் செய்து பார்க்கின்றனர். மற்றும் சிலர் வயதில் மூத்த இந்தியத் தாய்மார்களின் DIY கருத்தரிப்புச் சோதனைகளை முயன்று பார்க்கின்றனர்.
எளிதாகக் கிடைக்கக்கூடிய, வீட்டில் செய்து பார்க்கக்கூடிய கருத்தரிப்பு பரிசோதனை உபகரணத்தை வாங்கி உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். இப் பரிசோதனையில் நீங்கள் கர்ப்பமுற்றிருப்பது உறுதி என்றால் இச்செய்தியை உலகிற்கு அறிவியுங்கள்!!

Comments