பனிக்குடத் துளைப்பு பரிசோதனை - செய்முறை, பயன்கள் மற்றும் ஆபத்துகள் (Amniocentesis Test: Procedure, Use and Risks)



கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில், குழந்தையைச் சுற்றி அம்னியோட்டிக் ஃப்ளுயிட் எனப்படும் பனிக்குட நீர் இருக்கும், இது நீர் போன்ற திரவம். இதில் கருவின் உயிருள்ள செல்களும், குழந்தை பிறப்பதற்கு முன்பு அதன் ஆரோக்கியத்தைப் பற்றிய பல்வேறு முக்கியமான தகவல்களை அளிக்கக்கூடிய பல பிற பொருள்களும் இருக்கும்.
அம்னியோசென்டசிஸ் எனப்படும் பனிக்குடத் துளைப்பு பரிசோதனையில், கருவைச் சுற்றியுள்ள பையிலிருந்து சிறிதளவு திரவம் சேகரிக்கப்படுகிறது. ஒரு மெல்லிய ஊசியை வயிற்றின் வழியாக கருப்பைக்குள் செலுத்தி பனிக்குட நீர் சேகரிக்கப்படும் இதற்கு அல்ட்ராசவுண்ட் பயன்படுத்தப்படும். இப்படி சேகரிக்கப்பட்ட மாதிரியானது, பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
பொதுவாக, கர்ப்பத்தின் 14-20வது வார காலத்தில் இந்த சோதனை செய்யப்படும். ஆனால் சிலருக்கு அதற்குப் பிறகும் செய்யப்படலாம். இந்த சோதனையை செய்ய சுமார் 10 நிமிடங்கள் ஆகும். முழு செயல்முறையும் நிறைவடைய 30-40 நிமிடங்கள் ஆகலாம். இந்த சோதனை செய்துகொள்ளும்போது வலி இருக்காது, ஒருவித அசௌகரியம் இருப்பதாக மட்டுமே கூறப்படுகிறது.
எப்போது இந்த சோதனை செய்யப் பரிந்துரைக்கப்படும் ? (When is amniocentesis recommended?)
குழந்தைக்கு மரபியல் கோளாறுகள் ஏதேனும் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றபட்சத்தில் மட்டுமே இந்த சோதனை செய்யப் பரிந்துரைக்கப்படும். பின்வரும் சூழ்நிலைகளில் இப்படி நடக்கலாம்:
  • கர்ப்பிணிப்பெண்ணின் வயது 35 அல்லது அதற்கு மேல் இருக்கும்போது மரபியல் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். .
  • முன்னதாக செய்யப்பட்ட பரிசோதனைகளில், குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம், முதுகுத்தண்டுப் பிளவு (ஸ்பைனா பிஃபிடா) அல்லது சிக்கில் செல் அனீமியா போன்ற மரபியல் பிரச்சனைகள் இருந்ததாகத் தெரியவந்திருந்தால். .
  • முந்தைய கர்ப்பத்தில் இந்தப் பிரச்சனைகள் இருந்திருந்தால். .
  • குடும்பத்தில் பிறருக்கு தசை வலுவிழப்பு, நுரையீரல் நார்க்கட்டிகள் போன்ற பிரச்சனைகள் இருந்திருந்தால். .
பனிக்குடத் துளைப்பு பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமல்ல. இதைச் செய்துகொள்வதா வேண்டாமா என்பதை கர்ப்பிணிப்பெண்ணே முடிவு செய்யலாம்.
இது எதற்காக செய்யப்படுகிறது ? (Why is it done?)
பல்வேறு காரணங்களுக்காக இந்த சோதனை செய்யப்படும், அவற்றில் சில:
  • மரபியல் சோதனை: டவுன் சின்ட்ரோம் போன்ற மரபியல் குறைபாடுகளைக் கண்டறிய. .
  • கருவிலுள்ள குழந்தையின் நுரையீரல் சோதனை: குழந்தை பிறக்க, போதுமான அளவுக்கு அதன் நுரையீரல் வளர்ந்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு. .
  • கருவிலுள்ள குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய: கருவில் உள்ள குழந்தைக்கு நோய்த்தொற்று அல்லது நோய் ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிவதற்கு.
  • சிகிச்சை. பனிக்குடத்தில் பனிக்குட நீர் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிகமாக இருக்கும் திரவத்தை வெளியேற்றுவதற்காக. .
பனிக்குடத் துளைப்பு பரிசோதனையில் உள்ள ஆபத்துகள் (Are there any risks related to amniocentesis?)
பின்வருபவை போன்ற ஆபத்துகள் உள்ளன:
  • பனிக்குட நீர் கசிதல்சோதனையை செய்துகொண்ட பிறகு, பெண்ணுறுப்பின் வழியாக பனிக்குட நீர் கசியக்கூடும்.
  • கர்ப்பத்தின் 15 வாரங்களுக்கு முன்பு, இந்தச் சோதனையைச் செய்துகொண்டால், கரு கலையும் அபாயம் அதிகமாகும்.
  • ஊசியால் காயம் - சோதனையின்போது, குழந்தைக்கு ஊசியால் காயம் ஏற்படலாம், ஆனால் இது மிக அரிது.
  • அரிதாக, கருப்பை நோய்த்தொற்று ஏற்படலாம்.
  • சில நோய்த்தொற்றுகள் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவக்கூடும்.
பனிக்குடத் துளைப்பு சோதனை முடிவுகள் (Results of amniocentesis)
குழந்தைக்கு தாய் தந்தையிடமிருந்து ஏதேனும் பிரச்சனை வந்துள்ளது அல்லது மரபியல் கோளாறு உள்ளது என்று சோதனையின் முடிவில் தெரியவந்தால், பிரச்சனை பற்றி முழு விவரங்களை மருத்துவர் பெற்றோருக்கு விளக்குவார்.

Comments