வயிற்றில் புழு நெண்டுகிறதா? இதோ அதற்கான பாட்டி வைத்தியம்



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் தொந்தரவு இந்த புழுக்கடி தொந்தரவு தான். நமது வயிற்றில் வாழும் இந்த புழுக்கள் நிறைய வகைகளில் நம்மை தொந்தரவு செய்கிறது.
இதில் நிறைய வகைகளும் உள்ளன. நூல் புழுக்கள், உருளை புழுக்கள், சாட்டை புழுக்கள், ஜியார்டியா, கொக்கிப் புழுக்கள், நாடாப் புழுக்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த புழுக்கள் பெரும்பாலும் மழைக் காலங்களில் தான் அதிகமாக காணப்படுகின்றன.

அறிகுறிகள்

கெட்ட சுவாசம், வயிற்று போக்கு, கருவளையம், இரவில் தூக்கம் வராமல் கெட்ட கனவுகள் காண்பது, அடிக்கடி பசி எடுத்தல், தலைவலி, அனிமியா போன்ற அறிகுறிகள் குடல் புழுக்களை இருப்பதை தெரியப்படுத்துகின்றன. 

எனவே இந்த குடல் வாழ் புழுக்களை அழிக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.




இயற்கை உணவுகள்
இதைத் தவிர நிறைய இயற்கை முறைகளும் இந்த புழுக்களை ஒழிக்க பயன்படுகின்றன. நமது தினசரி உணவில் அகத்திக்கீரை, பப்பாளி பழம், பெருங்காயம், ஓமம், பட்டை, மஞ்சள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்தால் குடல் புழுக்களை முற்றிலும் ஒழித்து விடலாம்.



காரணங்கள்
இந்த புழுக்கள் நாம் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மூலமாக நமது குடலுக்குள் செல்கிறது. கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடும் போது உருளைப் புழுக்கள் நம் குடலில் நுழைய வாய்ப்புள்ளது. கொக்கிப் புழுக்கள் போன்றவை தண்ணீரில் வாழும், இவைகள் நமது சருமத்தின் வழியாக உள்ளே நுழைகின்றன. ஈ மொய்த்த உணவுகள், நாய்கள் போன்றவற்றை தொடுதல், வேக வைக்காத காய்கறிகள் போன்ற செயல்கள் நாடாப் புழுக்களை உடலினுள் நுழைக்கிறது.



கெட்ட உணவுப் பழக்கம்
நாம் மேற்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் இந்த புழுக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. இந்த புழுக்களின் முட்டைகள் நீர் மற்றும் உணவின் வழியாக உடலினுள் நுழைந்து நமது குடலுக்கு சென்று அங்கே லார்வாக்களாக பொரிகின்றன. இந்த புழுக்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை எல்லாம் உறிஞ்சி பெருகி நமக்கு ஊட்டச்சத்து குறைபாட்டையும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.



வீட்டு வைத்தியங்கள்
குடல் புழுக்களை அகற்ற முதலில் ஒரு 6 நாட்களுக்கு பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் முழு தானிய உணவுகளை மேற்கொண்டு வர வேண்டும்



தவிர்க்க வேண்டிய உணவுகள்
க்ரீம், ஆயில், பட்டர் போன்ற உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
இதனுடன் சூடான நீரில் இனிமா எடுத்து வருவது குடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றி குடலை சுத்தப்படுத்தி விடும்.



பூண்டு
இரண்டு பூண்டு பற்களை உங்கள் ஷூக்களில் வைத்து கொண்டு நடங்கள். நீங்கள் நடக்கும் போது பூண்டு பற்கள் நசுங்கி அதன் சாறு உங்கள் சருமத்தின் வழியாக இரத்தத்தில் கலந்து குடலுக்குள் சென்று விடும். இந்த சாறே போதும் உங்கள் குடல் புழுக்களை அழிப்பதற்கு.



தேங்காய்
1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை காலை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் 21/2 மணி நேரம் கழித்து விளக்கெண்ணெய்யை குடியுங்கள். இந்த முறை குடல் புழுக்கள் எல்லா வகையையும் அழித்து விடும். இது உங்களுக்கு குணமாகும் வரை எடுத்து கொள்ளுங்கள்.



கேரட்
நூல் புழுக்களை வெளியேற்ற கேரட் ஓரு சிறந்த மருந்தாகும். ஒலி சிறிய கப் அளவு கேரட்டை ஒவ்வொரு நாள் காலையிலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு அப்புறம் எதுவும் சாப்பிடாதீர்கள். இது புழுக்களை சீக்கிரமாக வெளியேற்றி விடும்.



பப்பாளி
1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பப்பாளி ஜூஸ் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் கலந்து குடித்து வாருங்கள். இதனுடன் 2 மணி நேரத்திற்கு பிறகு 40 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் 300 மி. லி வெதுவெதுப்பான நீர் சேர்த்து குடிக்க வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு பின்பற்ற வேண்டும். 7-10 வயது குழந்தைக்கு இதில் பாதியளவு மட்டுமே கொடுங்கள்.



பூசணிக்காய் விதைகள்
நாடாப் புழுக்களை அகற்ற பூசணிக்காய் விதைகள் பெருமளவு பயன்படுகிறது. இதன் உலர்ந்த விதைகளை பொடி செய்து கொதிக்க வைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மறுபடியும் அடுத்த நாள் 3 டம்ளர் எடுத்து வாருங்கள். இப்படி செய்து வந்தால் குடல் புழுக்களின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

Comments